Vokkaligar - ஒக்கலிகர் சமுதாயம் தோற்றமும் இடபெயர்ச்சியும்


ஒக்கலிகர் சமுதாயம் தோற்றமும் இடபெயர்ச்சியும்

தென் மாவட்டங்களில் உள்ள நடைமுறை சாஸ்திர சம்பிராதயங்கள் 

பண்டைய காலக் கணக்கீட்டுப் படி உள்ள க்ருதாயுகம், திரேதாயுகம், துவபரயுகம் மற்றும் கலியுகம் என்ற நான்கு யுகங்களில் ஒக்கலிக இனம் துவபரயுகத்தில் தோன்றியிருக்கக் கூடும். 

இமயமலையிலுள்ள வனப்பகுதியில் 48 லிங்கங்களுக்கு காமதேனு பசுவின் மடியில் சுரந்த பால் ஊட்டப்பட்டதால் 48 பேர் உருவாகி அவர்கள் சிறந்த ஒழுக்கமான பண்பட்ட ஒன்றுபட்ட கூட்டு வாழ்வை மேற்கொண்டதாகவும், இந்த 48 பேர் நவீன ஒக்கலிக சமுதாயத்தின் முன்னோர்கள் எனவும் கருதப்படுகின்றனர். 

அவர்களில் ஆவினவாரு. படவனாரு, பசலேனவார, எம்மேனவாரு, தசலேனவாரு, தண்யாதவாரு, உண்டேனவாரு, ஜலதேனவாரு மற்றும் ஜனகல்லினவாரு ஆகிய ஒன்பது பேர் யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுல நாககன்னிகளான ஒன்பது பெண்களை மணந்தனர் என்றும் எஞ்சியவர்கள் இவர்களின் சந்ததியினரை மணந்தனர் என்றும் கருதப்படுகிறது. 

ஒக்கலிகர் சமுதாயம் தொடக்கத்தில் கங்கை , யமுனை, நதிகள் பாயும் பகுதிகளான வங்காளம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதியில் விவசாயத் தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஆட்சி செய்து வந்த முகமதிய நவாப்களின் அட்டூழியங்கள் காரணமாக இச்சமுதாய மக்கள் துங்கபத்திரா நதிப்பகுதிகளுக்கு குடியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். 

கி.பி.8 மற்றும் கி.பி.10ம் நூற்றாண்டுகளில் கோதாவரி பகுதியின் குஞ்சிடிக்கர்களின் இருப்பிடம் மற்றும் மக்கள்தொகை பற்றி ஹைதராபாத் அரசு செய்தி வெளியீட்டுதழ் மற்றும் அரிகா அலக்கூர் செய்தி செய்தி வெளியீட்டுதழ் தெரிவிப்பதிலிருந்து ஒக்கலிகர் அப்பகுதியில் குடியேறி வாழ்ந்தனர் என்பதை அறிந்த கொள்ள முடிகிறது. 



கி.பி.11ம் நூற்றாண்டில் வட பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து துங்கபத்திரா நதிப்பகுதியில் நந்தனஹோசூர் பகுதியில் கூட்டமாக குடியேறி மேலும் அபிவிருத்தி அடைவதற்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த ஜனகல்வர் என்பவரை நினைவு கூறும் வகையில் அவர் இறந்த ஆடி 18ம் நாளை இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் குலதெய்வ வழிபாடு என அறிந்தோ அறியாமலோ வழிபட்டு வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிற்காலத்தில் நந்தன ஹோசூரில் ஏற்பட்ட அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் காரணமாக அநேக ஒக்கலிக சமுதாய மக்கள் அவ்விடத்தை விட்டு வேறு இடம் செல்ல வேண்டியதாயிற்று.

Vokkaligar - ஒக்கலிகர் சமுதாயம் தோற்றமும் இடபெயர்ச்சியும்

மைசூர் அரசின் Etirographical கணக்கெடுப்பின் படி, காமுகுல ஒக்கலிகர் கிருஷ்ண தேவராயரின் ஆட்சியின் கீழ் படைவீரர்களாகவும், வேளாண்மைத் துறையில் பணிபுரிபவர்களாகவும் இருந்து 1224-ல் இந்தியாவின் மேற்கு பகுதியான மகாராஷ்டிரா பகுதி நோக்கி நகர்ந்து. 1565-ல் நடந்த தலைக்கோட்டைப் போருக்குப் பின் தமிழ்நாடு பகுதியில் குடியேறினர் என்பது தெரியவருகிறது. மேலும் துங்கபத்திரா நதி பகுதியின் கிழக்கு பக்கம் நகர்ந்து ஓரிசா வங்காளப் பகுதிகளிலும் சென்று குடியேறியுள்ளனர். இதனால் வங்காளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் 'கெளடா தேசம்' என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. அங்கே அவர்கள் 'அம்மாசிமனை' என்ற குலதெய்வ வழிபாடு கோவிலை வடிவமைத்துள்ளனர். 

இந்தியாவில் பல்வேறு பகுதிகள் குடியேறி வாழும் ஒக்கலிக மக்கள் அனைவரும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த அம்மாசினை பகுதிக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு ஜனகல்வர் உபதேசித்த வழியில் தத்தம் குல தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். 

நவீன ஒக்கலிக சமுதாயத்தின் முன்னோடிகள் என்று கருதப்பட்ட 48 பேர்களின் பெயர்களே பிற்காலத்தில் குலப்பெயர்களாக அமைந்தது. அவரவர் வழிவந்தவர்கள் அந்தந்த குலப்பிரிவினராகக் கருதப்பட்டனர். அவர்களின் மனைவியர் பிற்காலத்தில் குலத்தெய்வங்களாக வழிபடப்பட்டனர். 

நாளடைவில் ஒக்கலிக சமுதாயம் பல்வேறு சமூக மாறுதல்களுக்கு உள்ளாகி குஞ்சிடிக ஒக்கலிகர். குடி ஒக்கலிகர், கங்கடிக ஒக்கலிகர், கீரைக்கார ஒக்கலிகர் மற்றும் காப்பு ஒக்கலிகர் என பல்வேறு பெயர்களைப் பெற்று விளங்கியது. 

17-ம் நூற்றாண்டில் ஆவினவாரு, அல்பேனவாரு, பசலேனவாரு, இரடுகரையோரு, ஜனகல்லினவாரு, ஜீரியோரு, ஜலதேனவாரு, ஒலகலோரு மற்றும் பலர் சித்ரதுர்க்கா பகுதியிலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து நீலகிரி மலை வழியாக தமிழகத்துள் நுந்ைது பவானி ஆற்றைக் கடந்து ஒக்கலியபாளையம் என்ற பகுதியை வந்தடைந்துள்ளனர். பிற்காலத்தில் இப்பகுதி ஒக்கலிக மக்களைத் தலைமை தாங்கி இப்பகுதிக்கு வழிநடத்தி அழைத்து வந்த வீரகேரளன் என்பவரின் பெயரால் வீரகேரளம் என்று மாற்றி அழைக்கப்பட்டதாக கோவை பேரூர் ஸ்ரீ பட்டீஸ்வரர் கோவில் சுவர்களில் காணப்படும் கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. 

படவனாரு குலமும் குடியோரு குலமும் வரும் வழியில் மறையே நீலகிரியிலும் மேட்டுப்பாளையத்திலும் குடியேறினர். அல்லேனவாரு, அந்தேனவாரு, பசலேனவாரு. பெல்லேனவாரு, படவனாரு, எம்மேனவாரு, கோயியோரு, உண்டேனவாரு, உளியாவரு, ஜலதேனவாரு, கல்லையோரு, கட்டேனவாரு. கொக்கேனவாரு, மாயோரு, மொள்ளேனவரு, உத்தேனவாரு ஆகியோர் தர்மபுரி, திண்டுக்கல், கம்பம் மற்றும் தேனி பகுதிகளில் மலையடிவாரங்களில் குடியேறி வாழத் தொடங்கினர். பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தர்மபுரி பகுதியில் குறைந்த அளவே உள்ளனர். 

Author :  V.S UDAILYALI

தென்மாவட்ட ஒக்கலிகர் ( காப்பு ) மகாஜன சங்கம்